பரிசுத்த வேதாகமத்தில் யாத்திராகமம்.20:11 இல் ”கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஒய்ந்திருந்தார். ஆகையால், கர்த்தர் ஓய்வு நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.” என்றும் எசேக்கியல் 20:12 இல் ”நான் தங்களைப் பரிசுத்தம் பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வு நாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.” என்றார். மத்தேயு 4:15 வசனத்தின்படி அந்தகார இருளில் இருந்த எங்களை அதாவது மெய்யான தேவன் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்ள முடியாமல் ஆத்துமாவிலே மரித்துப்போயிருந்த எங்களுடைய வாழ்விலே வெளிச்சத்தைத் தந்து தம்மை வெளிப்படுத்தினார். ஆதலால் தம்முடைய ஜீவனைத் தந்து நம்மை மீட்டவருக்கு பரிசுத்தமான ஓய்வு நாளிலே நன்றி செலுத்துதலே ஆராதனை என்பதாகும்.
எமது சபை ஆராதனை நடக்கும் இடங்கள்.
Soluthurn Zürich Schwyz Chur Genova Ansterdam