Language

Itali (Genova)ஆராதனை

Itali (Genova)ஆராதனை

 

காலம்

21.09.2019  02.00 - 04.00

 

முகவரி

CENTRO COMUNITARIO

E SOCIALE

DON ACCIAI

VIA VESUVIO 9

16134 GENOVA

0039 339 300 38 52

 

தொடர்புகளுக்கு
சகோதரன் லூக்கா
0039 (0) 3393003852 

Next Service

பரிசுத்த வேதாகமம், தேவனுடைய மனுஷர்கள் 40 பேரால், பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு எழுதப்பட்ட 66 புத்தகங்களின் தொகுப்பு.  இப்புத்தகமானது ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் 1600 வருடங்களுக்கு முன் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டாலும், ஒரே மாதிரி ஒரே நோக்கோடு ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலே எழுதப்பட்டது. இப்புத்தகம் கிரேக்க, எபிரேய, இராமிஸ் மற்றும் கல்தேய மொழிகளில் எழுதப்பட்டது. உலகிலேயே பரிசுத்த வேதாகமம்தான் அதிக மொழிகளில் சுமார் 2100 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாகும். பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

அதில், தேவன் பூமியையும் அதிலுள்ள சகலத்தையும் உண்டாக்கி, ஆதாம் ஏவாளை உருவாக்கினது முதற்கொண்டு, அவர்களின் பாவம், அதைத்தொடர்ந்து தேவனுக்கு மனிதர்கள் மத்தியில் ஏற்பட்ட தொடர்பு, ஆபிரகாமை அழைத்து அவருக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்கள், மோசே மூலமாக ஜனங்களுக்கு கொடுத்த சட்டதிட்டங்களும் வழிநடத்தலும், பாவத்திற்கான பரிகாரங்கள், அதையும் மீறி பாவம் பெருகினதினால் பாவநிவாரணபலியாக கிறிஸ்து பிறப்பார்,  தன்னை ஒப்புக்காடுப்பார் என்பதைக் குறித்த தீர்க்கதரிசனங்களை உள்ளடக்கியது பழைய எற்பாடாகும். இது 39 புத்தகங்களை கொண்டது.

புதிய ஏற்பாடு, கிறிஸ்துவின் பிறப்போடு ஆரம்பிக்கப்பட்டு, அவர் என்ன செய்வார், எப்படி சிலுவை மரணம், அதன் பின் என்ன நடக்கும், மனிதர்களை அவர் எப்படி தன் ஜனமாக்கினார் என்று புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ளது. இது 27 புத்தகங்களைக் கொண்டது.

பரிசுத்த வேதாகமத்தை ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg) என்பவரே  தமிழில் மொழி பெயர்த்து, தரங்கம்பாடியில் முதன் முதலில் வெளியிட்டார்.

”வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் நித்திய ஜீவன் உண்டெண்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. ” என்று யோவான் 5:39 இல் இயேசு சொல்கின்றார். ஆகையால் வேதாகமம் தான் நாம் பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்று, பாவமில்லாத ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து, தேவனிடத்தில் சேர்ந்து பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கவும் நித்திய ஜீவனை அடையவும் வழிகாட்டுகிறது.


இயேசு சொன்னார், ”சத்தியத்தையும் அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” அதன்படி மனிதர்களுடைய எல்லா பாவசாபக் கட்டுக்களையும் உடைத்து தேவனண்டை வழிநடக்க  இது உதவுகின்றது. ஆகையால் நீங்களும் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து விடுதலையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

இணைய வேதாகமம் 1

இணைய வேதாகமம் 2

ஒலி வேதாகமம்

Tamil church in Genova

1
1
Day
2
2
2
2
Hours
4
4
8
8
Minutes
5
5
9
9
Seconds
இன்னும்

ஒரு செய்தி

பிள்ளைகளுக்கு நீ போதி பாகம் 2