போதகர் அ.தேவபாலன் அவர்கட்கு தேவன் கொடுத்த தரிசனத்தின்படியே இயேசு ஜீவிக்கின்றார் சபை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கைத் தேசத்தில் பிறந்த இவர், 1982 ஆம் ஆண்டு ஐரோப்பா தேசத்திற்கு வந்தார். வாலிபப் பிராயத்தில் தன்னுடைய மன விருப்பத்தின்படி வாழ்ந்து கொண்டிருந்த இவரை,  நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன், நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன். எரேமியா 1:5 என்ற வாக்குப்படி தேவன் அவரை கிருபையாய் மரண இருளிலிருந்து மீட்டெடுத்தார்.

ஒருநாள் தேவன் அவருடன் உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் ? என்று ஆதங்கமாய் பேசினார். அன்றுமுதல் தன்னுடன் பேசிய கடவுள் யார் என்று தேட ஆரம்பித்தார். பேசியவர் ஜீவனுள்ள தேவன் இயேசுகிறிஸ்து என்று அறிந்துகொண்டார். சபைக்குச் செல்ல ஆரம்பித்தார். தொடர்ந்துவந்த நாட்களில் தேவன் அவரை ஊழியக்காரனாகப் பயிற்றுவித்தார். ஒருநாள் உன் ஜாதிகளுக்குள்ளே உன்னை அனுப்புவேன் என்று சொல்லி, தமிழ்மக்கள் மத்தியில் ஊழியம்செய்யும்படி தேவகட்டளை பிறந்தது. அதன்பின், தேவன் அவரை போதக ஊழியத்திற்கு அழைத்து, தேவவார்த்தையினூடாக தரிசனத்தை கொடுத்தார். அதன்படி 2003 ஆம் ஆண்டு தன் துணைவியாருடன் இணைந்து இயேசு ஜீவிக்கின்றார் சபையை Soluthurn இல் ஸ்தாபிக்க கர்த்தர் கிருபை செய்தார். இன்றுவரை உண்மையான ஊழியனாக நடந்துவரும் அவரையும் சபையையும் தேவன் ஆசீர்வதித்து நடாத்திவருகிறார்.

இயேசு ஜீவிக்கின்றார் சபையானது, சுவிற்சர்லாந்தில் Soluthurn மாவட்டத்தில் மட்டுமல்லாது, Zürich, SchwyzChur, Genova-Italy மற்றும் Ansterdam-Holland மாவட்டங்களிலுமாக விரிவாக்கப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு செய்தி

பக்தியுள்ளவன்

sathuru.jpg